மலேசியா

‘பத்மஶ்ரீ’ விருதைப் பெற்றார் ஒடிசி நடன மேதை ரம்லி

புதுடில்லி, எப்ரல் 3 – மலேசியாவின் உலகப்புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய நடனக் கலை வித்தகரான  டத்தோ ரம்லி இப்ராஹிமிற்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கி அதிபர் ராம் நாத் கோவிந்த் கௌரவித்தார்.

மலாய் பாரம்பரிய உடையில் இருந்த ரம்லி இப்ராஹிம் அதிபர் மாளிகையில் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

65 வயதான ரம்லி, தம்முடைய 40 ஆண்டு காலமாக இந்தியாவின் ‘ஓடிசி’ பாரம்பரிய நடனத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும் பணிக்காக பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது, இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே இருக்கும் கலாசார உறவினை மேலும் நெருக்கமாக்க உதவும் என்றார் ரம்லி.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker