இந்தியா

தமிழக முன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்

சிவகங்கை, ஏப்ரல். 4-  திமுகவின் சிவகங்கை முன்னாள் அமைச்சர் செ. மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 85. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது.

அவருக்கு மனைவி, இரண்டு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். திருப்பத்தூர் தொகுதியில் செ. மாதவன் 4 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1962 ஆம் ஆண்டு.1967 ஆம் ஆண்டு,1971 ஆம் ஆண்டு மற்றும் 1984ஆம் ஆண்டு என 4 முறை எம்எல்ஏ.வாக  இருந்தார். அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இவரின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மாதவனின் மறைவுக்கு அம்சலி செலுத்தும் வகையில் வணிகர் சங்கங்கள் சிங்கம்புணரி பகுதி முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker