மலேசியா

‘ஹபிப் ஜூவெல்ஸ்’ நிறுவனர் டத்தோ ஹபிப் காலமானார்!

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 4 – மிகப் பிரபலமான நகைக் கடையான ‘ஹபிப் ஜுவெல்ஸ்’  நிறுவனரான டத்தோ ஹாஜி ஹபிப் முகம்மட் அப்துல் லத்திப் (வயது 92) இன்று அதிகாலை காலமானார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சுயநினைவில்லாத நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த டத்தோ ஹபிப், நினைவு  திரும்பாம லேயே உயிர் நீத்தார் என்று அவருடைய பேரனான முகம்மட் ஷாமிர் (வயது 34) என்பவர் தெரிவித்தார்.

அதிகாலை 4.26 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இங்குள்ள கெபித்தான் பள்ளி வாசலில் இறுதித் தொழுகை நடத்திய பின்னர், பேரா ரோட்டிலுள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

1958 ஆம் ஆண்டில் பினாங்கு பிட் ஸ்த்ரிட்டில் ஹபிப் ஜுவெல்ஸை ஒரு சிறிய குடும்ப நகைக் கடையாக டத்தோ ஹபிப் தொடங்கினார். தற்போது பல இடங்களில் கிளை விரித்து, ஹபிப் ஜுவெல்ஸ் மிகப் பெரிய நகை வணிக நிலையங்களாக மாற்றம் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker