மலேசியா

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதி; இந்தியர்களுக்கென 25 அம்சங்கள்! -(VIDEO

கோலாலம்பூர், ஏப்ரல் .5- எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் இன்று தமிழில் வெளியிட்ட தனது தேர்தல் கொள்கை அறிக்கையில், நாடற்றவர்களாக வகைப் படுத்தப்பட்டுள்ள மலேசிய இந்தியர்களின் இன்னல்களை நூறே நாளில் களைவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக 25 அம்சத் திட்டங்களை  பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல்

அறிக்கையை  பக்காத்தான் ஹராப்பான்   தலைவரான துன் மகாதீர் இன்று பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில்  வெளியிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்களுக்கென குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு;

## இந்தியர்கள் சொந்த வீடுகளைப் பெறும் வகையில் தேசிய வீடமைப்புக் கொள்கையில்  முக்கியத்துவம் அளிக்கப்படும்.

## முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 40-பி தரப்பினருக்கு வாடகைத் திட்டத்தின் வழி சொந்த வீடுகளைப் பெற வழி காணப்படும்.

## தேசிய மொழிப் பள்ளிகளுக்கு ஈடாக, தரம் உயர்த்தும் நோக்கில் எல்லா தமிழ்ப் பள்ளிகளையும் அரசாங்கப் பள்ளிகளாக பராமரிக்க  உறுதி அளிக்கப்படுகிறது.

## தமிழ் இடைநிலைப்பள்ளிகளை அமைக்கவும் பக்காத்தான் ஹராப்பான்  வாக்குறுதி அளிக்கிறது.

## தொழிலாளர்களின் குறைந்த அடிப்படைச் சம்பளத்தை 1,500 ரிங்கிட்டாக ஆட்சிக்கு வந்த முதல் தவணையிலேயே வழி காணப்படும்.

## அரசு சார்ந்த நிறுவனங்கள், நகராட்சி,  மாநில மற்றும் மத்திய அரசாங்க வேலைகளில் இந்தியர்களுக்கு 10 விழுக்காடு வேலை வாய்ப்பை உறுதி செய்யப்படும்.

## பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைப் போல எல்லா மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் .

## பத்து ஆண்டுகளுக்கான இந்தியர்களின் சமுகப் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு 400 கோடி ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

## ஆலயங்கள் கட்டுவது மற்றும் இடுகாட்டிற்கான நிலங்களை ஒதுக்குவதில் பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணி தாராளப் போக்கைக் கடைபிடிக்கும்.

## இந்தியர்கள் பெல்டா, பெல்க்ரா போன்ற நிலத் திட்டங்களில் இணையவும் விவசாயம் மற்றும் கால்நடைத் திட்டங்களில் ஈடுபடவும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்படும்.

மேற்கண்ட சில முக்கிய அம்சங்கள் உள்பட 25 கொள்கைத் திட்டங்களை இந்தியர்களுக்காக பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையில் இன்று வெளியிட்டது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker