மலேசியா

பிரிபூமி கட்சி தற்காலிக ரத்து; தே.மு.வுக்கு பாதகமாக மாறும்! -ஸாஹிட்

கோலாலம்பூர், ஏப்ரல்.5- பிரிபூமி கட்சியின் பதிவினை ஆர்.ஓ.எஸ் ரத்து செய்திருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம் இல்லை என்றும், ஆர்.ஓ.எஸ்-சின் இச்செயலால் 14-ஆவது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியை தழுவக் கூடும் என்று முன்னாள் அமைச்சர் டத்தோ ஸாஹிட் இப்ராஹிம் கருத்துரைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகாதீருக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் அவருக்கு கண்டிப்பாக வாக்களிப்பர் என்றும், அதனை தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது என்றும் ஸாஹிட் சொன்னார்.

“துன் மகாதீருக்கான ஆதரவு எப்போதும் போல அவருக்கு கிடைக்கும். இம்முறை அவருக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை. அவர் எந்தக் கட்சியின் கீழ் போட்டியிட நினைத்தாலும், அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிப்பர்” என்று அவர் மேலும் சொன்னார்.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பினால்  பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் டான்ஶ்ரீ முகைதீனால் தொடங்கப்பட்ட பிரிபூமி கட்சி குறித்த சில ஆவணங்கள் ஆர்.ஓ.எஸ்-சிடம் முறையாக சமர்ப்பிக்கப் படவில்லை என்று கூறி, அக்கட்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள், தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை என்றால், அக்கட்சியின் பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று ஆர்.ஓ.எஸ் எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker