மலேசியா

அஞ்சல் வாக்குகள்: தபால் பெட்டியில் போடாதீர்! – எஸ்.பி.ஆர்.

கோலாலம்பூர், ஏப்ரல்.6- பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை தபால் நிலையப் பெட்டிகளில் போடாமல், எஸ்.பி.ஆர். எனப்படும்  மலேசியத் தேர்தல் ஆணையத்தின்  அதிகாரிகளிடம் வாக்காளர்கள் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்குகள் அளிப்பதற்கான முறையான பெட்டிகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.வாக்காளர்கள் அதில்தான் அவர்களின் வாக்குகளை போட வேண்டும் என்று பேராக் மாநில தேர்தல் ஆணைய துணை இயக்குநர் ஷஸ்ரி இட்ஜாம் கூறினார்.

”அஞ்சல் வாக்குகளை எப்படி வாக்களிப்பது என்பதை முறையாக தெரிந்துக் கொள்ளாத வாக்காளர்கள், கடந்த பொதுத் தேர்தலின் போது, தங்களின் வாக்குகளை கடிதங்கள் போடும் தபால் பெட்டிகளில் போட்டு விட்டனர்.”

”அஞ்சல் வாக்குகள் அனைத்தும் வந்து சேர்ந்து விட்டனவா என்ற சோதனை நடத்தப்பட்ட போது, பல வாக்குகளை கடிதங்கள் போடும் தபால் பெட்டிகளில் கண்டெடுத்தோம்” என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இம்முறை, வாக்காளர்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை கடித உறைகளில் போட்டு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளிடம் (வாக்களிக்கும் மையங்களிலிருந்து திரும்பும் அதிகாரிகளிடம்) கொடுத்து அனுப்ப வேண்டும் என்று ஷஸ்ரி இட்ஜாம் கேட்டுக் கொண்டார்.

தேர்தல் தினத்தன்று கடமையில் ஈடுபட்டுள்ள ஊடக் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் அஞ்சல் வாயிலாக வாக்களிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker