மலேசியா

தொகுதிகள் எத்தனை? வேட்பாளர் யார் யார்? அடுத்த வாரத்தில் மஇகா முடிவு! -சுப்ரா

கோலாலம்பூர், ஏப்ரல்.6- 14-ஆவது பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் அடுத்த வாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப் படுவர் என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட மஇகா வேட்பாளர்கள் 80 விழுக்காடு தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இனிமேற்கொண்டு, வேட்புமனு தாக்கல் மற்றும் பிரசாரம் ஆகியவற்றுக்காக மஇகாவினர் தயார் ஆகவுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி தலைமைத்துவத்துடனான சந்திப்பின் போது, மஇகாவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து கலந்து   ஆலோசிக்கப்படும். அடுத்த வாரத்திற்குள் வேட்பாளர்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

14-ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு  ஏதுவாக 13ஆவது நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் ரசாக் இன்று  அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker