மலேசியா

நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும்! -பிரதமர் அறிவித்தார்.

புத்ராஜெயா, ஏப்ரல் 6 – நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாளை சனிகிழமை ஏப்ரல் 7 ஆம் தேதி கலைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்,  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பாங்குனான் பிரடானா புத்ராவில் இருந்து நாடாளுமன்றம் கலைக்கப்ப்பு மீதான பிரதமரின் இந்த அறிவிப்பு, டிவி-1 இல் நேரடி ஒளிபரப்புச் செய்யப் பட்டது.

இதற்கு முன்பாக. 13 ஆவது நாடாளுமன்றம்  நஆளை கலைக்கப்படுவது தொடர்பில் இணக்கத்தைப் பெற, யாங்டி பெர்த்துவான் அகோங், பிரதமர் நஜிப்புக்கு  பேட்டி அளித்தார்.

அண்மைய காலமாக எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கு வழிகாணப்படும் என்ற ஆருடங்கள் பரவலாக நிலவி வந்தன.

இந்நிலையில் 13 ஆவது நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் தொலைக்காட்சி  நேரடி ஒளிபரப்பில் வெளியிட்டபோது, துணைப்பிரதமர்  உடன்  இருந்தார். இந்த அறிவிப்பு நிகழ்வில்  அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றக் கலைப்பை ஒட்டி மாநில சட்ட மன்றங்களும் அடுத்தடுத்து  கலைக்கப்படும்  என்று பிரதமர்  கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் அமைப்புச் சட்ட விதிகளும் ஏற்ப, வேட்பு மனுத் தாக்கல், மற்றும் வாக்களிப்புக்கான தேதியை மலேசிய தேர்தல் ஆணையம் அடுத்த சில தினங்களுக்குள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker