மலேசியா

மாநில சட்டமன்றங்கள் நாளை கலைக்கப்படும்!

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – நாளை சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை முன்னிட்டு, சிலாங்கூர், பேரா, கிளாந்தன், நெகிரிசெம்பிலான் உள்ளிட்ட பல  மாநிலங்களில் சட்டமன்றங்களைக் கலைப்பதற்கான இணக்கத்தப் பெற மாநில மந்திரி புசார்கள் சுல்தான்களைச் சந்திக்கவிருக்கின்றனர்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசியல் அமைப்புச் சட்டப்படி, சட்டமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு வழிவகை காண, தாம் சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்க உள்ளதாக மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ரயாட், சிலாங்கூர் சட்டமன்றத்தின் 56 தொகுதிகளில் 44 இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை சனிக்கிழமை பேரா சட்டமன்றத்தைக் கலைபதற்கான இணக்கத்தை, மாநில ஆட்சியாளர் சுல்தான் நஷ்ரின் ஷாவிடமிருந்து பெறுவதற்காக மந்திரி புசார் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி சந்திக்கவிரும்புகிறார்.

அதேவேளையில் கிளந்தான் சட்டமன்றமும் நாளை கலைக்கப்படும். நாடாளுமன்றம் கலைக்கப்படும் தருணத்தில் ஏக காலத்தில் சட்டமன்றத்தையும் கலைக்கும் நடைமுறை கிளந்தான் தொடர்ந்து பின்பற்றும் என்று மந்திரி புசார் டத்தோ அகமட் யாக்கோல் கூறினார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker