மலேசியா

டத்தோஶ்ரீ சுப்ராவை எதிர்த்து போட்டியிடத் தயார்! –வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தை எதிர்த்துத் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி அறிவித்தார்.

ஈப்போ பாராட் தொகுதியில் போட்டியிடத் தயாரா? என்று டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்திற்கு ஐ.செ.க விடுத்திருக்கும் சவாலை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை என்ற நிலை வருமானால், அவரை (சுப்ராவை) எதிர்த்து, அவருடைய சொந்த தொகுதியிலேயே போட்டியிட பக்காத்தான் ஹரப்பான் தமக்கு வாய்ப்பு அளித்தால், அதற்கு தாம் தயாராக இருப்பதாக வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

ஈப்போ பாராட் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிடத் தயாரா? என்று டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்திற்கு குலசேகரன் சவால் விடுத்துள்ளார். அதே வேளையில் பி.கே.ஆர் வேட்பாளராக சிகாமட்டில் போட்டியிட வேதமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆண்டு தேர்தலில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்தை எதிர்த்து பி.கே.ஆர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுவா சூய் மெங் போட்டியிட்டு 1,217 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker