மலேசியா

யு.பி.எஸ்.ஆர்.: ஆசிரியை உமா விடுதலை!

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – தன்னுடைய கைத்தொலைபேசியில் 2014 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.ஆர். அறிவியல் வினாத்தாளை முன்கூட்டியே பெற்று, பதிவு செய்து வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழ்ப் பள்ளி ஆசிரியையான எம். உமா மகேஸ்வரி (வயது 31) கோலக் கங்சார் செசன்ஸ் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.

உமா மகேஸ்வரிக்கு எதிரான வழக்கில் எதிர்த் தரப்பு, நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தி இருப்பதால் தாம் அவரை விடுவிப்பதாக நீதிபதி ஜொகாரி ஹசான் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.ஆர் வினாத்தாளை வைத்திருந்த குற்றஞ்சாட்டப்பட்ட சில ஆசிரியர்களில் உமா மகேஸ்வரியும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

உமா மகேஸ்வரிக்கு எதிராக அடிப்படை ஆதாரங்கள் இருப்பதை அரசுத் தரப்பு நிருபிக்க தவறியதன் காரணமாக ஏற்கெனவே அவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றாலும் அரசுத் தரப்பு அவருக்கு எதிராக தைப்பிங் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது என்று அவரது வழக்கறிஞர் எம். குலசேகரன் கூறினார்.

இந்த மேல் முறையீட்டின் போது சம்பந்தப்பட்ட உமா மகேஸ்வரி, செசன்ஸ் நீதிமன்றத்தில் தனது தற்காப்பு வாதத்தைப் புரிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் செசன்ஸ் நீதிமன்றத்தில் 16 சாட்சிகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், உமா மகேஸ்வரியை மீண்டும் விடுதலை செய்தது என்று வழக்கறிஞர் குலசேகரன் சொன்னார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உமா மகேஸ்வரி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker