இந்தியா

லண்டன், பாரிஸை கலக்கப் போகிறார் அனிரூத்!

சென்னை, ஏப்ரல்.8- முதன் முறையாக லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய  நகரங்களில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் மூலம் கலக்கத் தயாராகி விட்டார் அனிரூத்.

இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமான் போன்றவர்களை போல் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துபவர் பட்டியலில்   அனிரூத்தும் அ ண்மைய காலத்தில் இடம் பெற்றுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள வெம்பிள் அரெனாவிலும் அதற்கு அடுத்த 17 ஆம் தேதி பாரிஸ் நகரிலுள்ள ஜெனித்திலும் இவரின் இசைக் கச்சேரி நடைபெறவிருக்கிறது.

பல ஆண்டுகளாக இசைத்துறையில் உள்ள இளையராஜா- ஏ.ஆர். ரகுமான் போன்ற இசைமேதைகளும் அந்த இடங்களில்  இன்னும் இசைக் கச்சேரி நடத்தவில்லை.

இதனால், அனிரூத் ரசிகர்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த  இசை நிகழ்ச்சி களைகட்டும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker