மலேசியா

‘எங்கேப்பா கே.எல். இரட்டைக் கோபுரம்?” வலைவீசித் தேடும் வலைத்தளவாசிகள்!

கோலாலம்பூர், ஏப்ரல்.10– பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரக் கட்டடம் எங்கே? என்று கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் சமூக ஊடகங்களில் வசிக்கும் வலைத்தளவாசிகள்.

‘ஏன், என்ன நடந்தது’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா… ஆமாம், இரட்டைக் கோபுரத்தைக் காணவில்லை என்று இவர்கள் அலை மோதுகிறார்கள். ‘கிணற்றைக் காணவில்லை என்று ‘வைகைப் புயல்’ வடிவேலு தேடிய மாதிரி என்று கூட சொல்லலாம்.

அண்மையில், தேசிய முன்னணி வெளியிட்டுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை  கையேடு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கோலாலம்பூரில் மையப்பகுதி தொடர்பான படத்தில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை மட்டும் காணவில்லை என்பதுதான் வலைத் தளவாசிகள் வரிந்துகட்டிக் கொண்டு விவாதிக்கும் விஷயமாகி இருக்கிறது.

படத்தில் இரட்டைக் கோபுரத்தை சுற்றியுள்ள எல்லா கட்டடங்களும் உள்ளன. ஆனால், இரட்டைக் கோபுரத்தை மட்டும் காணவில்லை எப்படி இது மாயமாய் மறைந்தது? என்று கேட்கிறார்கள் இந்த வலைத்தளவாசிகள்.

ஒரு வேளை இந்த இரட்டைக் கோபுரம் துன் மகாதீர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. எனவே, அதற்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்று நினைத்து கட்டடத்தை காணாமல் போகும்படி செய்து விட்டார்களோ? இது நல்ல மேஜிக் தான் என்று வலைதள வாசிகள் கதைத்துள்ளனர்.

படத்தில், மேல் புறம் இரட்டைக் கோபுரத்தை காணவில்லை. ஆனால், அருகிலிருந்த குளத்தில்  தண்ணீரில்  தெரியும் பிம்பம், இரட்டைக் கோபுரம் அங்கே இருந்ததைக் காட்டிக் கொடுத்துள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker