மலேசியா

செனாவாங்கில் கொன்று புதைக்கப்பட்ட ஐவரின் எழும்புக் கூடுகள் மீட்பு!

செனாவாங், ஏப்ரல்.11-  இங்கு ஜாலான் சுங்கை காடூட், பத்து- 8 என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் கொலைச் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஐவரின் எலும்புக் கூடுகளை போலீசார் இன்று  கண்டு பிடித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் குண்டர்  கும்பலைச்  சேர்ந்த 34 பேரை பல்வேறு குற்றங்களுக்காக போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியதன் வாயிலாக, இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பு கூறியது.

கடந்த மூன்று ஆண்டுகளில், வெவ்வேறு இடங்களிலும் சமயங்களிலும் அந்த ஐவரும் கொலைச் செய்யப்பட்டு இருக்கின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களின் உதவியோடு அந்த ஐவரின் எலும்புக் கூடுகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

இது குறித்த தகவல் கொடுக்க நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலுடின் மறுத்து விட்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker