உலகம்

எங்கள் ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாரா? – ரஷ்யாவுக்கு டிரம்ப் சவால்

வாஷிங்டன், ஏப்ரல்.12-  ‘சிரியாவில், அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்’ என ரஷ்யாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப்  சவால் விடுத்துள்ளார்.

உள்நாட்டு போரால் நிலை குலைந்து கிடக்கும் சிரியாவில்  கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி  வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்த வெளியேறி விட்டனர்.

கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில்  நடத்திய ரசாயன ஆயுத தாக்குலில் 70க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து  வரும் முகமை தெரிவித்தது.

இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது .

இதே போல் ரஷ்யா கொண்டு வந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது. சிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கை விட வேண்டும் என ஐ.நாவுக்கான ரஷ்ய தூதர் இந்த கூட்டத்தின் போது எச்சரித்தார்.

இதற்கிடையில் சிரியா மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷ்யதூதர் அலெக்சாண்டர் ஜாகிப்கின் நேற்று எச்சரித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின் , சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்  நடத்தினால் அந்த ஏவுகணைகளையும் அது எங்கிருந்து ஏவப்பட்டதோ அந்தப் பகுதியையும் ரஷ்யா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப்  சவால் விடுத்துள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker