மலேசியா

சுங்கை சிப்புட்டில் மக்கள் மாறி விட்டனர்! –வேள்பாரிக்கு டாக்டர் ஜெயகுமார் அறிவுறுத்து

கோலாலம்பூர்ஏப்ரல்.12- 14-ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் ச.சாமிவேலுவின் மகன் சா.வேள்பாரிமஇகா சார்பில் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை தொடர்ந்துஅந்தச் சவாலை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கூறினார்

இருந்த போதிலும்முன்னாள் அமைச்சரான துன் சாமிவேலுவிற்கு வாக்களித்த அந்த வாக்காளர்களின் மனநிலை இப்போது மாறி விட்டது என்று டாக்டர் ஜெயகுமார் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1973-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரைசுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக சாமிவேலு பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அப்பகுதி வாழ் மக்கள்தங்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றார் போல் இப்போது மாறி விட்டனர்.  இந்தத்தொகுதிக்கு வரும் ம இகாவின் எந்தவொரு வேட்பாளரும் அப்பகுதி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு கூடிவிட்டதை கண்கூடாக காணப்போகிறார்கள் என்று டாக்டர் ஜெயகுமார் கூறினார்

மக்கள் பண அரசியலை நிராகரித்து விட்டனர்அரசியல்வாதிகளின் செயல்களை அவர்கள் கவனித்து வருகின்றனர்ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில்குறிப்பாக வீட்டு வசதி மற்றும் குறைந்தபட்ச வருமானம் ஆகியவற்றில் அக்கறை காட்டும் வேட்பாளர்களை மக்கள் கவனித்து வருகின்றனர்” என்று அவர் கருத்துரைத்தார்

பி.எஸ்.எம் கட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும்இந்நிலை 14-ஆவது பொதுத் தேர்தலில் தொடரும் என்றும் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker