Latestமலேசியா

எல்ஆர்டி தண்டவாளத்தில் மயங்கி விழுந்த கர்ப்பிணியால் பரபரப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 19 – டாமாய் எல்ஆர்டி நிலையத்தில் கர்ப்பிணிப் பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி, ரயில் தண்டவாளப் பகுதியில் விழுந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.46 மணியளவில் நடந்தது. உடனடியாக 26 வயதுடைய அந்தப் பெண், தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டு அவருக்கு அவரச மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த திடீர் விபத்து காரணமாக எல்ஆர்டி சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் ஏராளமானோர் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் சிறிது நேரம் அவதிப் பட நேர்ந்தது.

பாதுகாப்பை முன்னிட்டு டாமாய் எல்ஆர்டி நிலையத்தில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பயணிகள் பலர் பேருந்துகள் மூலம், மற்றொரு எல்ஆர்டி நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டனர்.

இதனிடையே எல்ஆர்டி தண்டவாளத்தில் ஏதாவது ஒரு பொருள் குறுக்கிடுவதாக இருந்தால், உடனடியாக ரயில் நகராமல் நின்று விடக்கூடிய தனியங்கி முறை பொருத்தப்பட்டிருப்பதால், அந்தக் கர்ப்பிணிப் பெண் தண்டவாளத்தில் தவறி விழுந்ததும், அடுத்து வரவிருந்த ரயில் உடனடியாக நின்று விட்டது.

அதேவேளையில், எல்ஆர்டி அதிகாரிகள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கிய வேளையில் தீயணைப்புத் துறையும் விரைந்து வந்து சேர்ந்ததில், 7 நிமிட இடைவெளிக்குள் அந்தப் பெண் மீட்கப்பட்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker