Latestமலேசியா

மர்ம ஆசாமிகளால் ஸ்தாப்பாக்கில் விரிவுரையாளர் சுட்டுக் கொலை!

கோலாலம்பூர், ஏப்ரல். 21 –தனியார் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த வந்த 35 வயதுடைய ஒருவர் ஸ்தாப்பாக்கில், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலை 6 மணியளவில் ஜாலான் கோம்பாக்கில் அமைந்திருக்கும் பள்ளி வாசலுக்கு அவர் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தலைநகர் போலீஸ் படைத்தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லாஷிம் சொன்னார்.

இடாமான் அடுக்குமாடி வீட்டுப் பகுதியிலிருந்து அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அவர் சென்று கொண்டிருந்த போது, அந்த நபர்கள் 10 முறை அவரைச் சுட்டனர். சம்பவ இடத்திலேயே அரபுக்காரரான அந்த விரிவுரையாளர் மாண்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker