Latestமலேசியா

பாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு!

கோலாலம்பூர், ஏப்ரல்.23- ஸ்தாப்பாக்கில் அதிகாலை தொழுகைக்காக நடந்து சென்று கொண்டிருந்த பாலஸ்தீன இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பான சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் எனக் கருதப்படும் இரு நபர்களின் வரைபடங்களை மலேசியப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தந்த தகவல்களின் அடிப்படையில் இந்த வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் மலேசியாவை விட்டு வெளியேறும் அனைத்து எல்லை நிலையங்களுக்கும் இந்தப் படங்கள் அனுப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகம்மட் ஃபுஷி ஹருண் தெரிவித்தார்.

நிபுணர்களைக் கொண்டு இந்தப் படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த சந்தேகப் பேர்வழிகள் ஐரோப்பிய அல்லது மத்திய கிழக்கு வம்சாவளியினராக இருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அவர் சொன்னார்.

37  வயதுடைய மின் பொறியியல் துறை விரிவுரையாளரும் விஞ்ஞானியுமான பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபாடி அல்பாத்ஷ் என்பவர் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ஸ்தாப்பாக, இடாமான் புத்ரி அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இரு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதிக சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்த இருவரும் 14 முறை அவரை நோக்கிச் சுட்டதாக தெரிகிறது.  ஃபாடி அல்லபாத்ஷை கொல்லவேண்டும் என்ற முழு நோக்கத்துடன் இந்த ஆசாமிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என போலீசார் நம்புகின்றனர்.

இவரது படுகொலைப் பின்னணியில் இஸ்ரேலின் உளவுத்துறை சம்பந்தப்பட்டிருப்பதாக அவருடைய குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹம்மாஸ் தீவிவாத இயக்கத்தில் ஃபாடி அல்பாத்ஷ் இடம்பெற்றுள்ளார் எனக் கூறப்பட்டது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker