Latestஉலகம்

வேற்றுக் கிரகவாசி போன்று மாற பிறப்புறுப்பை நீக்கிய இளைஞன்!

வாஷிங்டன், ஏப்ரல். 23- அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளைப் பின்பற்றி வேற்றுக் கிரகவாசியைப் போல் தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்கரான வின்னி ஓ (வயது 22) என்பவர் 110 ஒப்பனை அறுவைச் சிகிச்சைகளைச் செய்து தன்னை வேற்றுக் கிரகவாசியைப் போல் மாற்றிக் கொள்ள முயன்று வருகிறார்.

அதுமட்டுமல்லாது முழுமையான வேற்றுக் கிரகவாசியாக மாற ஆசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தன்னுடைய 17வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ‘மாடலாக’ இருந்த இவர், பின்னர் அதிக செலவில் அறுவைச் சிகிச்சைகளை செய்து வேற்றுக் கிரகவாசி போல் அவரை மாற்றிக் கொண்டுள்ளார்.

சுமார் 13,000 டாலர் செலவு செய்து இவரது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இது குறித்து பேசிய வின்னி ”வேற்றுக்கிரகவாசியாக மாறுவது எனது வாழ்நாள் கனவு. அதுமட்டுமின்றி பூமியில் வேற்றுக் கிரகவாசியாக வாழ்வது சாத்தியம். அதற்கு அதிஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker