உலகம்மலேசியா

இளவரசி கேத்திற்கு ஆண் குழந்தை குட்டி இளவரசரின் முதல் படம்!

லண்டன்,, ஏப்ரல்.24-  இங்குள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் நேற்று காலை  பிறந்த குட்டி இளவரசரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. லண்டனிலுள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் இளவரசி கேத் மிடில்டனுக்கு  நேற்று காலை 11 மணியளவில் ஆண்  குழந்தை பிறந்தது. இது அவருக்கு மூன்றாவது பிரசவமாகும்.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக கென்சிங்டன் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி  அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது குட்டி இளவரசரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

முன்னதாக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இளவரசர் வில்லியம், தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆனால், அதே அளவு கவலையும் தொற்றிக் கொண்டுள்ளது என குறும்பாக தெரிவித்திருந்தார்.

பிறந்த குட்டி இளவரசர் 3.8 கிலோ எடை இருப்பதாகவும் சராசரியாக பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளின் எடை 3.5 கிலோ எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் குட்டி இளவரசர் “பிரின்ஸ் ஆப் கெம்பிரேஜ்” என அறியப்படுவார் எனth தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் அரியணை ஏறும் பட்டியலில் குட்டி இளவரசர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இவரது பிறப்பால் அரச குடும்பத்தின் அரியணை பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவர் ஐந்தாவது இடத்தில் இருப்பதால் இளவரசர் ஹரி ஆறாவது இடத்திற்கு மாற்றம் ஆகியுள்ளார்.

அது மட்டுமின்றி பிரிட்டனின் குட்டி இளவரசி சார்லெட் (இளவரசர் வில்லியன்- கேத் மில்டனில்) இரன்டாவது பெண் குழந்தை விரைவில் அரசியாக அரியணை ஏறி புதிய வரலாற்றை உருவாக்கவிருக்கிறார்.  மூன்றாவது குழந்தை பிறந்து விட்டதால் அரச குடும்பத்தில் சார்லெட் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker