Latestஉலகம்

‘கூகுள்’ சுந்தர் பிச்சை ‘காட்டுல மழை!’ கோடிக்கணக்கில் கொட்டுது பணம்!

நியூயார்க், ஏப்ரல்.24- கூகுள் நிறுவனம் தனது தலைமைச் செயல் அதிகாரி .சுந்தர் பிச்சைக்கு வழங்கிய ரூ. 2,508 கோடி மதிப்பிலான பங்குகள் இன்று அவர் வசமாகின்றன.

அமெரிக்கா- தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணைய தேடுபொறி தொழில் நுட்ப நிறுவனம் கூகுள், இதன் தலைமைச்  செயல் அதிகாரி பதவி உயர்வு பெறுவதற்கு முன் 2014 இல் அவருக்கு ஏராளமான பங்குகள் கூகுள் நிறுவனம் வழங்கியது.

கூகுள் நிறுவன விதிமுறைப்படி அதன் அதிகாரிக்கு வழங்கப்படும் பங்குளை மூன்று ஆண்டுகளுக்கு விற்க முடியாது. இந்நிலையில்  இந்தப் பங்குகள் வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைவதால் அந்தப் பங்குகள்  மீதான முழு உரிமையும் சுந்தர் பிச்சை  வசமாகிறது.

கடந்த 2014இல் வழங்கப்பட்ட அந்த பங்குளின் தற்போதைய மதிப்பு 2,508 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டிலும் சுந்தர் பிச்சைக்கு பல பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker