Latestமலேசியா

பாலியலுக்கு பலியான சிறுமியிடம் அரசு மருத்துவமனை கட்டணம் வசூலிப்பா?

கோலாலம்பூர், ஏப்ரல்.24- பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூன்று நாட்களுக்கு அரசாங்க மருத்துவமனை ஒன்றில் தங்கியதற்காக அவளிடமிருந்து ரிம.430  கட்டணமாக கோரியுள்லது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

13 வயதான அச்சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளாள் என்று கடந்த ஜனவரி மாதம் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரி ஒருவர், அச்சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அச்சிறுமியை சோதனை செய்த மருத்துவ அதிகாரி, மேலும் சில மன நீதியிலான மதிப்பீடு  சோதனைகள் அச்சிறுமியிடம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதனால் அச்சிறுமி அங்கு மூன்று நாட்களுக்கு தங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்முறை குறித்து செய்யப்பட்ட போலீஸ் புகாரின் பிரதியை மருத்துவமனையின் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்குமாறு அந்த மருத்துவமனை ஊழியர்கள் அச்சிறுமியை கேட்டுக் கொண்டனர். அவ்வாறு செய்தால் மட்டுமே, அந்தச் சிறுமியிடம் மருத்துவ கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இரண்டு போலீஸ் புகார்களின் பிரதியையும் மருத்துவமனையில் நான் சமர்ப்பித்து விட்டேன். இருந்த போதிலும், மூன்று மாதங்கள் கழித்து, அந்த மருத்துவ கட்டணத்தை செலுத்துமாறு கடிதம் ஒன்று எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான் மற்றவர்களின் பாதுகாப்பில் உள்ளேன். இந்தக் கட்டணத்தை வயது குறைந்த நான் எவ்வாறு செலுத்துவேன்?” என்று அச்சிறுமி கேள்வி எழுப்பினார்.

அச்சிறுமியின் தந்தை ஒரு மலேசியர் என்ற போதிலும், அச்சிறுமியின் பிறப்பை பதிவு செய்த போது, அவளின் தந்தை தவறான விவரத்தை கொடுத்ததால், அவளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும் அச்சிறுமி தெரிவித்தாள்.

தன்னுடைய சகோதர்கள் இருவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு குடியுரிமை கிடைக்க தாம் இன்னும் இரு ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும் என்று அவள் சொன்னாள்.

சபா மாநிலத்தில் பிறந்த அச்சிறுமியை அவளின் தந்தை கொடுமைப் படுத்தி வந்தார். அச்சிறுமியின் உறவினர்கள் அச்சிறுமியை அவளின் ஐந்து வயது முதற்கொண்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி வந்தனர் என்று அச்சிறுமி தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker