Latestமலேசியா

வருமான வரி பாரங்களை வழங்க சேவை முகப்பிடங்கள்!

கோலாலம்பூர்ஏப்ரல்.24- வருமான வரி விவர பாரத்தை இணையம் வாயிலாக பூர்த்தி செய்ய முடியாதவர்கள்உள்நாட்டு வருவாய் வாரியத்தின் சில குறிப்பிட்ட அலுவல கிளைகளில் ஏப்ரல் 27-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 29-ஆம் தேதி வரை திறந்து வைக்கப்படும் இணையச் சேவை முகப்பிடங்களில் அப்பாரங்களை பூர்த்தி செய்துக் கொள்ளலாம்

கோலாலம்பூர்கோத்தா கினாபாலு மற்றும் கூச்சிங்கிலுள்ள அவ்வாரியத்தின் கிளைகளில்வரி செலுத்துவோர் அந்தப் பாரங்களை பூர்த்திச் செய்துக் கொள்ளலாம்வருமான வரி விவர பாரத்தைப் பூர்த்திச் செய்வதில் சந்தேகம் ஏதும் எழும் பட்சத்தில்அந்த முகப்பிடங்களில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளின் உதவிகளையும் வரி செலுத்துவோர் நாடலாம்

தீபகற்ப மலேசியாவில்காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவ்வலுகங்கள் திறந்து வைக்கப்படும்

வியாபார ஆதாயங்கள் இல்லாத வரி செலுத்துவோர், 2017-ஆம் ஆண்டிற்கான தங்களின் பி.இ அல்லது எம் (BE or M form) பாரங்களை மே மாதம் 15-ஆம் தேதிக்குள்பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு உள்நாட்டு வருவாய் வாரியம் கேட்டுக் கொண்டது.

வணிய ஆதாயங்கள் பெறுவோர்ஜூலை மாதம் 15-ஆம் தேதிக்குள் அப்பாரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்ஆனால்நீடிக்கப்பட்டுள்ள இந்தக் காலக்கேடுஇணையம் வாயிலாக வரி செலுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறதுநேரடியாக பாரங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு அல்ல.

நேரடியாக பாரங்களை சமர்ப்பிப்பவர்கள்ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் அப்பாரங்களை சமர்ப்பித்து விட வேண்டும்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker