Latestமலேசியா

வெளிநாட்டு வாக்காளர்களுக்கு 4 நாள் அவகாசம் போதுமா? – பெர்சே கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல்.24- வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் தங்களின் வாக்குகளை பதிவுச் செய்ய வெறும் நான்கு வேலை நாட்கள் கால அவகாசம் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வாக்குப் பதிவு ஆவணங்கள் எவ்வாறு அவர்களுக்கு அனுப்பப் படுகிறது மற்றும் அவை எத்தனை நாட்களில், மீண்டும் மலேசியாவிற்கு எடுத்து வரப்படும் என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தெளிவுப் படுத்த வேண்டும் என்று பெர்சே 2.0 அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அந்த வாக்குப் பதிவு பாரங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மே மாதம் 9-ஆம் தேதியன்று அந்த வாக்குகள் மீண்டும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 28-ஆம் தேதியிலிருந்து மே மாதம் 9-ஆம் தேதி வரை, நான்கு வேலை நாட்கள் தான் உள்ளன. அந்த நான்கு நாட்களில் தான் அந்த வாக்குப்பதிவு ஆவணங்கள் அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க முடியும். அந்த நான்கு நாட்களில் எவ்வாறு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பி வைப்பர் என்று பெர்சே அமைப்பின் இடைக்கால தலைவரான ஷாரூல் அமான் முகமட் சாரி கேள்வி எழுப்பினார்.

“உலகத்தின் பல்வேறு நாடுகளில் மலேசியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் வாக்குகளை பதிவுச் செய்ய இந்த வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன, இந்த குறுகிய கால அவகாசத்தில் அந்த வாக்குப் பதிவு அவர்களிட்த்தில் சென்றடையுமா? அப்படியே சென்றடையும் பட்சத்தில், அவை மலேசியாவிற்கு மே மாதம் 9-ஆம் தேதிக்குள் வந்து சேர்ந்து விடுமா?” என்று அவர் கேள்விகளை அடுக்கினார்.

கால தாமதமாக வாக்குப் பதிவு பாரங்கள் மலேசியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அது குறித்து அவர்கள் உடனடியாக புகார் செய்ய வேண்டும் என்று ஷாரூல் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker