Latestஇந்தியா

கேரளாவில் எரித்து கொல்லப்பட்ட பிரபல’ சீரியல்’ நடிகை கவிதா!

திருவனந்தபுரம்,ஏப்ரல்.25- கேரளாவைச் சேர்ந்து 35 வயது சீரியல் நடிகை கவிதா எரிந்த நிலையில் பிணமாகக் கண்டு பிடிக்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இவரை யாராவது எரித்து கொலை செய்திருப்பார்களோ என்கிற கோணத்தில் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கவிதா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நன்கு வயது மகளுடன்    தனித்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

உறவினர் வீட்டிற்கு சென்ற குழந்தை தாயிடம் போகவேண்டும் என அழுது அடம்பிடித்த நிலையில் உறவினர்கள்   அவரது மகளை  கவிதா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, வீட்டில் கவிதா எரிந்து நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கவிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து போலிசார் விசாரணை செய்ததில், அவர் பெங்களூரில் அழகு நிலையம் திறக்க தேவையான பணம் கிடைக்காததால் மனமுடைந்து இப்படி ஒரு முடிவை எடுத்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

ஆனால், தொடர்ந்து விசாரணை செய்ததில் இவரை யாரேனும் எரித்து கொன்று இருக்கலாம் எனவும் விசாரணையை முடுக்கி விட்டனர். அதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது என்று போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker