Latestமலேசியா

“கோழைகளின் கூட்டம்” -நீக்கியவர்களைச் சாடினார் கேவியஸ்

கோலாலம்பூர், ஏப்ரல். 25 –”கோழைகளின் கூட்டம் ஒன்று,  கட்சியில் எனக்குள்ள உறுப்பினர் அந்தஸ்தைக் கூட  திரும்பக் கேட்கிறது” என்று பதவியிலிருந்து விலகிய மைபிபிபியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் சாடினார்.

இது தொடர்பாக தம்முடைய கருத்தை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

“என்னைப் பார்த்தால் அவ்வளவு பயமா? அவர்களுக்கு கட்சியின் உறுப்பியம் கூட திரும்பத் தரப்பட வேண்டுமென்றால், அதையும் விட்டு விடுவேன்” என்று அவர் சொன்னார்.

“உங்களை நீங்களே, சுய வெட்கத்திற்கு ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். அந்த அளவுக்கு கூனி குறுகிப் போகாதீர்கள். உங்களில் எவருமே கட்சியை உண்மையில் நேசிப்பவர்கள் அல்ல என்பது தெளிவான விஷயம்” என்று கேவியஸ் வர்ணித்துள்ளார்.

மைபிபிபியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்தும், கூட்டரசுப் பிரதேச மைபிபிபி தலைவர் பதவியில் இருந்தும் பேரா மாநில ஆலோசகர் பதவியில் இருந்தும் தாம் விலகிவிட்டதாக இன்று காலையில் கேவியஸ் அறிவித்திருந்தார்.

அதே வேளையில் கேவியஸ் விலகவில்லை, உச்ச மன்றம்  நேற்றே அவரைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டது என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ மோகன் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker