Latestஉலகம்

சிங்கப்பூரில் பெண் அமைச்சர் இந்திராணி ராஜா!

சிங்கப்பூர், ஏப்ரல்.25- சிங்கப்பூரில் பிரதமர் லீ  சியென் லூங் தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் இந்திய – சீன வம்சாவளியை சேர்ந்த   இந்திராணி ராஜா (வயது 55) பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் (2006- 2011) காலக்கட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்துள்ளார்.

இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். இவரது தாயார் ஒரு சீனர்.  இவருக்கு பிரதமர் துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித் துறையிலும்  இரண்டாவது அமைச்சராகவும் செயலாற்றுவார்.

இவரையும் சேர்த்து லீ சியன் லூங்  பிரதமர்துறையில்  3 பெண்கள்  அமைச்சரவையில் அங்கம்  வகிக்கின்றனர். இந்தியரான  எஸ். ஈஸ்வரன் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மற்றுமொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனில் புதுசேரி போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker