Latestமலேசியா

சுங்கை சிப்புட்; டாக்டர் ஜெயக்குமார் போட்டியிடுவது உறுதி!

கோலாலம்பூர், ஏப்ரல்.25- சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை பி.எஸ்.எம். எனப்படும் மலேசிய சோசலிஸக்  கட்சியின் வேட்பாளராக தாம் போட்டியிடுவது உறுதி என அதன் நடப்பு எம்.பி.யான டாக்டர் மைக்கேல் ஜெயக் குமார் எனக் கூறியுள்ளார்.

தாம் மீண்டும் தம்முடைய பி. எஸ்.எம். கட்சி சார்பில் போட்டியிட்டால் வாக்குகள் பிளவுப் பட்டு, அதனால் அங்கு தேசிய முன்னணி வெற்றிப் பெறும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அத்தொகுதியிலிருந்து விலகிக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக  முன்னர் அறிவித்திருந்த டாக்டர்   ஜெயகுமாரின் முடிவு இப்போது மாறியுள்ளது.

இம்முறை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பி.எஸ்.எம் கட்சி இணையவில்லை. அதனால், அக்கட்சி, சுங்கை சிப்புட் தொகுதியில், பாஸ், பக்காத்தான் மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றுடன் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“நாங்களும் அத்தொகுதியில் வேட்பாளராக நின்றால், வாக்குகள் நிச்சயமாக பிளவு படும். பக்காத்தான், பாஸ் மற்றும் பி.எஸ்.எம் கட்சிகளுக்கான வாக்குகள் பிளவு பட்டால், தேசிய முன்னணி அங்கு வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது. அந்த அடிப்படையில், பி.எஸ்.எம் இத்தொகுதியில் போட்டியிட்டு தான் ஆகவேண்டுமா? என்று பி.எஸ்.எம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்” என்று அவர் கூறியிருந்தார்.

மஇகாவின் முன்னாள் தேசிய தலைவர் துன் ச.சாமிவேலு, சுங்கை சிப்புட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால், கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, அத்தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளராக டாக்டர் ஜெயகுமார் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டிலும் அவர் போட்டியிட்டு வென்றார்.

அத்தொகுதியில் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள், இம்முறை பக்காத்தானுக்கு வாக்களிப்பதா அல்லது பி.எஸ்.எம்மிற்கு வாக்களிப்பதா என்ற குழப்பமான நிலையில் இருக்கின்றனர் என்றும், அதனால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்தத் தொகுதியில் போட்டியிடுவ திலிருந்து தாம் விலகக் கூடும் என்று டாக்டர் ஜெயகுமார்  முன்னர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்சியின் முக்கியஸ்தர்களுடனும் சுங்கை சிப்புட்டிலுள்ள கட்சியின் ஆதரவாளர்களுடனும் கலந்து பேசிய பின்னர் அந்த முடிவை அவர் மாற்றிக்கொண்டார். கட்சி சார்பில் தனித்த போட்டியிடுவது என கட்சி முடிவு செய்திருப்பதாக பொதுச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் கூறினார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker