Latestமலேசியா

கெந்திங் சாலையில் பேருந்து தீக்கிரை! ஓட்டுனர் உயிர் தப்பினார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 26- கோலாலம்பூர் –கெந்திங் சாலையின் 10 ஆவது கிலோ மீட்டர் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இந்தப் பேருந்தின் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பேருந்தின் டயருக்கு அருகில் இருந்து இந்தத் தீ பரவியிருக்கலாம் என்று கெந்திங் தீயணைப்புத்துறை கூறியது. இந்தப் பேருந்து முற்றாக எரிந்து போய்விட்டது. தங்களுக்கு மாலை 6.50 மணி அளவில் தகவல் கிடைத்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி யுஸ்ரி அப்துல்லா சானி தெரிவித்தார்.

சுமார் 20 நிமிட இடைவெளிக்குள் தாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் ஆனால், அதற்குள் தீ முற்றாக பேருந்து முழுவதும் பரவி விட்டது. எனினும், இந்தத் தீயை அணைப்பதற்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

அதிர்ஷ்டவசமாக அந்தப் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை. கெந்திங்கிலிருந்து பயணிகளை ஏற்றி வருவதற்காக இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.

 

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker