Latestஇந்தியா

மணமகன் பலி: திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பிய கல்லூரி ஆசிரியர் கைது!

புவனேஸ்வர், ஏப்ரல்.26- ஒடிசாவில் திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் ஒன்றை அனுப்பியதால் குண்டு வெடித்து மணமகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மணமகன் கொல்லப்பட்டுள்ளதுடன் உடனிருந்த மணப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் புன்ஜிலால் மேகெர் என்பவரும், வெடிகுண்டினால் கொல்லப்பட்ட மணமகனின் தாயாரும்  ஒன்றாக பணி புரிந்து வந்ததாகவும், தனக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை  மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த புன்ஜிலால் மேகெர், திட்டமிட்டு பழிக்குப் பழி வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இணையத்தில் இருந்து வெடிகுண்டுத் தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்ட புன்ஜிலால் மேகெர், தனது வீட்டிலேயே வெடிகுண்டுப் பார்சலைத் தயார் செய்துள்ளார்.

பின்னர் .சுமார் 230  கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பயணம் செய்து அங்கிருந்து, வெடிகுண்டுப் பார்சலை மணமகனின் பெயருக்கு அனுப்பி யுள்ளார். அந்த வெடிகுண்டுப் பார்சலானது சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவு 3 பேருந்துகளில் மாறி மாறி கொண்டு வரப்பட்டு  இறுதியில் தொடர்புடைய மணமகனிடம் வந்து சேர்ந்துள்ளது.

திருமணத்தன்று மாலை, மணமகளுடன் இணைந்து பார்சலை திறந்தபோது குண்டு வெடித்தது. மணமகனான சௌம்யா சேகர் (வயது 26) என்பவர் அச்சம்பவத்தின் பந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker