Latestமலேசியா

ரோஸ்மாவின் பிறந்தநாள் கேக்: அது போலிச் செய்தி? –பிரதமர் அலுவலகம்

புத்ராஜெயா, ஏப்ரல்.26 –பிரதமரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் பிறந்த நாள் ‘கேக்’ அரசாங்கப் பணத்தில் வாங்கப் பட்டிருப்பதாகவும், அவருடைய புத்ராஜெயா அலுவலகத்திற்கு உள் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது அரசாங்க செலவில்தான் என்றும் வெளியான தகவல்கள் போலியானவை.

பிரதமரின் அலுவலகம், முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. தனிநபர் ஒருவர், தனது குரல் பதிவை ‘வாட்ஸ்- அப்’ பில் பதிவேற்றியுள்ளார். அதில் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தனிநபரின் குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன் மக்களைத் தூண்டி விடுவதாக அமைந்துள்ளது என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது.

அண்மைய காலமாக இது போன்ற போலித் தகவல்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக பரவி வருகின்றன. குறிப்பாக வாட்ஸ்- ஆப், டெலிகிராம் போன்றவற்றில், அடுத்து வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

மேலும் ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட வரியில் 70.1 மில்லியன் ரிங்கிட் நிதியமைச்சில் இருந்து காணாமல் போய் விட்டதாகவும், போலிச் செய்திகள் பரப்பப்படுவதை பிரதமர் அலுவலகம் கண்டித்துள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker