Latestமலேசியா

வெளிநாட்டு வாக்காளர்கள்:வாக்குச் சீட்டுகளை எப்படி அனுப்புவீர்கள்? ‘பெர்சே’ கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல்.24- வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் தங்களின் வாக்குகளை பதிவுச் செய்யும் பொருட்டு, அவர்களுக்கான வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுப்பி வைக்கும்? என்பது குறித்து விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ‘பெர்சே’ இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் வாக்குச் சீட்டுகளில் தங்களின் வாக்குகளை பதிவு செய்து, மே மாதம் 9-ஆம் தேதிக்குள், அங்கிருந்து நாடு திரும்பும் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்காளர்கள்  தங்களின் வாக்குகளை திருப்பி அனுப்பி வைக்க முடியுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அது குறித்து விவரிக்க வேண்டும் என்று பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, தேர்தல் ஆணையம் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குச் சீட்டுகளை அனுப்பி வைக்க விருப்பதாக பெர்சே அமைப்பின் இடைக்கால தலைவரான ஷாரூல் அமான் முகமட் சாரி கூறினார்.

“சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்கள் அல்ல. அதன் பின்னர், தொழிலாளர் தின விடுமுறை வழங்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மலேசியர்களிடம் இந்த வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப் பட்டு, மே மாதம் 9-ஆம் தேதிக்குள், திரும்ப மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு விடுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாண்டு, வழக்கத்திற்கு மாறாக, தேர்தல் ஆணையம், வாக்குச் சீட்டுகளை, வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களின் முகவரிகளுக்கு நேரிடையாக அனுப்பி

‘போஸ் லாஜூ’ எனப்படும் அஞ்சல் சேவையை உபயோகித்து, அவர்களுக்கு வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹஷீம் அப்துல்லா கூறியுள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker