Latestஉலகம்

இளவரசர் ஹர்ரியின் திருமணம்: மணப்பெண் தோழி பிரியங்கா

லண்டன், ஏப்ரல்.27- முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா பிரிட்டனின் இளவரசர் ஹர்ரி மற்றும் மேகன்  மார்க்கலின் திருமணத்தில் மணப்பெண் தோழியாக இருப்பார்.

இந்தி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.  சுமார் 64 நாடுகளில் இத்தொடர் ஒளிபரப்ப படுவதால் உலகம் முழுவதும் பிரியங்கா சோப்ரா பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹர்ரி- மேகன் அரச குடும்பத்தினர் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதில் மேகன் மணப்பெண் தோழியாக பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் எந்த உடை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

பிரியங்காவும்  முன்னாள் நடிகையுமான மேகன் மெர்க்கலும் மிக நெருங்கிய தோழிகள் எனப்து குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா கூறுகையில், மேகனை நான் அறிந்த நாள் முதல் ஓர் அரச குடும்பத்தின் வருங்கால மருமகளாக பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.இன்றைய உலகின் மிகச் சிறந்த சமூகப் போராளியாகத் திகழும் மேகன் பிரிட்டன் அரச குடும்பத்திற்கான இளவரசி என்பதை விட மக்களுக்கான இளவரசி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். என்று தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker