Latestமலேசியா

காலை 9 மணிமுதல் 10 மணிவரை நாளை வேட்பு வேட்புமனு தாக்கல்;

கோலாலம்பூர், ஏப்ரல்.27- 14-ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை நடைபெறும். வேட்பாளர்கள், அல்லது அவர்களை மும்மொழிபவர்கள், வேட்பாளர்களின் சார்பில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 555  சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவிருக்கிறது.

நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரிம.10,000-தையும், சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவோர் ரிம.5,000-யையும் முன்பணமாக செலுத்த வேண்டும். சமர்ப்பிக்கப்படும் வேட்புமனு பாரங்களை அதிகாரிகள் சோதனையிட்டு, அவர்களின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்று முடிவு செய்வர்.

காலை 10 மணிக்கு, வேட்பாளர்களின் மனுக்கள் குறித்து அதிகாரிகள் அறிவிப்பு செய்வர்.  நியமனங்களுக்கு எதிராக ஆட்சேபனை காலம் 10 மணிக்கு முடிவடையும். ஒரு தொகுதியில் ஒருவர் மட்டுமே போட்டியிடும் பட்சத்தில், தகுதியுள்ள அந்த வேட்பாளர் அத்தொகுதியின் வெற்றியாளராக பிரகடனப்படுத்தப் படுவார்.

1947-ஆம் ஆண்டின் தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் கீழ், இசைக் கருவிகளையோ அல்லது ஒலிபெருக்கியையோ, மிருகங்கள், கார்கள் அல்லது லோரிகள் மீது வைத்து உபயோகிப்பது குற்றமாகும். இதனை வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் செய்யக் கூடாது.

வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியிலிருந்து 50 மீட்டர் தூரம் வரை, எக்கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் அங்கு கூடக் கூடாது. வேட்பாளர், அல்லது அவரை மும்மொழிபவர் மட்டுமே அங்கு கூட முடியும்.  இந்த விதிமுறைகளை மீறுபவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரிம.3,000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker