Latestமலேசியா

வேட்புமனுத் தாக்கல்; தலைநகர் போலீசார் தயார் நிலை!

கோலாலம்பூர், ஏப்ரல்.27- நாளை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலின் போது அசம்பாவிதம் ஏதும் நேர்ந்து விடாமல் இருப்பதை உறுதிப் படுத்தும் பொருட்டு, 2,600 போலீசார் தலைநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவிருக்கின்றனர்.

மொத்தம் 361 அதிகாரிகள், 2,303 போலீசார் மற்றும் 29 தொண்டூழியர்கள் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவிருக்கின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோஶ்ரீ மஸ்லான் லாஸிம் கூறினார்.

“எவ்வித அசம்பாவிதமும் நேர்ந்து விடாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், அப்படி ஏதும் விரும்பத்தகாத வகையில் நிகழ்ந்தால், அதனை கட்டுப் படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபடுவர்” என்றார் அவர்.

கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 12 மையங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகின்றன. சாலை போக்குவரத்து நாளை சற்று அதிகமாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வரும் வேட்பாளர்கள், குறிப்பிட நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து விடுமாறு டத்தோஶ்ரீ மஸ்லான் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker