Latestமலேசியா

12 மணிநேர இடைவிடாத ‘ஆஸ்ட்ரோ உலகம்’ சித்திரா பௌர்ணமி நிலவரங்கள்!

கோலாலம்பூர், ஏப்ரல். 27- சித்திரா பௌர்ணமி முன்னிட்டு மலேசியாவில் பேரா மாநிலத்தில் தெலுக் இந்தானில் ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலிருந்து 12 மணிநேர இடைவிடாத நிலவரங்களை ஆஸ்ட்ரோ உலகம் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் வலைத்தளம் வாயிலாகக் கொண்டு வரவுள்ளது.

இந்த இடைவிடாத நிலவரங்களின் போது, தெலுக் இந்தான் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவில் நடைபெறும் சித்திரா பௌர்ணமி கொண்டாட்டம் மற்றும் சிறப்புப் பூஜைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது ‘விழுதுகள்’ அறிவிப்பாளர் ரேவதி, ராகா வானொலி அறிவிப்பாளர் ரேவதி மற்றும் நதியா ஜெயபாலன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலுக்குத் திரளாக வந்து தரிசனம் செய்வது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தினத்தன்று பக்தர்கள் நேற்றிக்கடன்களை செலுத்துவதோடு மட்டுமின்றி, மதியம் மகேஸ்வர பூஜை எனப் பல விசேஷங்கள் இடம்பெறும்.

அதுமட்டுமின்றி, இரவு வெள்ளிரத ஊர்வலம் குறித்த தகவல்களையும் ஆஸ்ட்ரோ உலகத்தின் முகநூல் மற்றும் வலைத்தளம் வாயிலாகப் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இவ்வருடத்தின் சித்திரா பௌர்ணமி நேரடி நிலவரங்களை எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 8 முதல் இரவு 8 வரை ஆஸ்ட்ரோ உலகத்தின் முகநூல் மற்றும் வலைத்தளத்தில் இணைய மறவாதீர்கள்.

அதை வேளையில், சித்திரா பௌர்ணமி கொண்டாட்டத்தைக் குறித்த புகைப்படங்களை ஆஸ்ட்ரோ உலகத்தின் இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker