Latestமலேசியா

ஈஜோக் – சுங்கை துவா; 4 முனைப் போட்டிகள்!

ஈஜோக், ஏப்ரல் 28 – ஈஜோக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் கே.பார்த்திபன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. பார்த்திபனை அடுத்து பி.கே.ஆர் வேட்பாளராக இட்ரிஸ் பின் அகமட் போட்டியிடுகிறார். மேலும் பாஸ் கட்சியும் தனது வேட்பாளராக  ஜப்ரி பின் மேஜான் என்பவரை நிறுத்தியுள்ளது.

இவர்களுக்கு அப்பால் பி.ஆர்.எம் கட்சியின் வேட்பாளராக குமரன் தமிழ்தாசன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சுங்கை துவாவில் 4 முனைப் போட்டி
சிலாங்கூர், சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் தே.மு. வேட்பாளர் டத்தோ என்.ரவிச்சந்திரனுடன் நால்வர் போட்டியிடுகின்றனர்.
கடந்த முறை ரவிச்சந்திரன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
கடந்த முறை சுங்கை துவாவில் போட்டியிட்டு வென்ற அமிருடின் சஹாரி மீண்டும் பி.கே.ஆர் சார்பில் போட்டியிடும் வேளையில் பாஸ் சார்பில் முகம்மட் பின் இப்ராகிம், மற்றும் சுயேட்சை வேட்பாளராக பக்ருள் ஹிசாம் என்பவர் போட்டியிடுகின்றார்.
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker