Latestமலேசியா

ஐ.சி-யை மறந்துவிட்டு வந்த வங்சா மாஜூ பி.கே.ஆர் வேட்பாளர் !

கோலாலம்பூர், ஏப்ரல் 28 – கோலாலம்பூர் வங்சா மாஜூ நாடாளுமன்றத் தொகுதியில் தனது அடையாளக் கார்ட்டை (ஐ.சி)  மறந்து விட்டு வந்த பி.கே.ஆர் வேட்பாளர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ – வேட்பு மனுத்தாக்கல் மையத்தில் உள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்தல் அதிகாரி உள்ளே அணுமதிக்காததால் அவர் வெளியிலேயே அமர்ந்திருந்தார்.

அவர், தனது அடையாளக் கார்ட்டை வீட்டிலுள்ள போட்டோ காப்பி இயந்திரத்திலேயே விட்டு வந்து விட்டார். இதனால் பி.கே.ஆர் முகாமில் கடும் பதட்டம் ஏற்பட்டது.

அடையாளக் கார்ட்டை எடுத்துவர அவரது உதவியாளர் வீட்டுக்கு விரைந்தார். பின்னர், அடையாளக் கார்ட்டின் நகல் மற்றும் அசல் அடையளக் கார்ட்டின் போட்டோ ஆகியவற்றின் அடிப்படையில் அவர் வேட்பு மனுத்தாக்கல் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker