Latestமலேசியா

காப்பாரில் மோகனா – மாணிக்கா – அப்துல் சானி!!

காப்பார், ஏப்ரல் 28 – காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ மோகனா முனியாண்டியை எதிர்த்து பார்ட்டி ரயாட் மலேசியா வேட்பாளராக முன்னாள் எம்.பி. எஸ்.மாணிக்கவாசகம் போட்டியிடுகிறார்.
அதே வேளையில் பி.கே.ஆர் சார்பில் அப்துல்லா சானியும் பாஸ் கட்சி சார்பில் அப்துல் ரனி பின் ஒஸ்மானும் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் கடந்த 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் தோல்வி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இம்முறை மஇகாவின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் என்ற முறையில் மோகனா முனியாண்டி, இங்கு தீவிர பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கி விட்டார்.

காப்பார் நாடாளுமன்ற & சட்டமன்ற (செமெந்தா, செலாட் கிளாங்) பார்ட்டி ரயாட் மலேசியா வேட்பாளர்கள்

செமாந்தாவில் காந்தி நாகமுத்து
இதனிடையே, செமாந்தா சட்டமன்றத் தொகுதியில் பார்ட்டி ரயாட் மலேசியா (பி.கே.ஆர்) சார்பில் காந்தி நாகமுத்து என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் தே.மு. சார்பில் சரோனி பின் ஜுடியும் பாஸ் சார்பில் வான் ஹஸ்ரினாவும் பி.கே.ஆர் வேட்பாளராக டாக்டர் டாரோயா பிந்தி அல்வி ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

மெரு தொகுதியில் மாணிக்கா
காப்பார் நாடாளுமன்றம் தொகுதியில் போட்டியிட்டுள்ள முன்னாள் எம்.பி. மாணிக்கவாசகம், மெரு சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றார்.
இங்கு தே.மு வேட்பாளர் கைருல் அன்வார் பி.கே.ஆர் வேட்பாளர் முகம்மட் பக்ருள்ராஷி, மற்றும் சுயேட்டை வேட்பாளராக ஷீகி வெங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

செலாட் கிள்ளான் தொகுதி
செலாட் கிள்ளான் தொகுதியில் தே.மு. சார்பில் முகம்மட் கைரி, பாஸ் சார்பில் ஹலிமா அலி, பி.கே.ஆர் சார்பில் அப்துல் ரஷிடி மற்றும் பார்ட்டி ரயாட் மலேசியா சார்பில் ஜெயச்சந்திரன் வடிவேலு ஆகியோருடன் சுயேட்டையாக ஜைனுல் அன்வார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker