Latestமலேசியா

கேமரன் மலை: சிவராஜ், மனோகரன், சுரேஷ் பலப்பரிட்சை!

கேமரன் மலை, ஏப்ரல் 28 – பொதுத் தேர்தல் வரும் முன்பே மிகப் பெரிய சர்ச்சைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இத்தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறுகிய வாக்குகள் வித்தயாசத்தில் ஐ.செ.க வேட்பாளரான வழக்கறிஞர் மனோகரன் தோல்வி கண்டார்.

இம்முறை தே.மு வேட்பாளராக மஇகா இளைஞர் தலைவர் சிவராஜ் சந்திரன், பி.கே.ஆர் சார்பில் மனோகரன், பெர்ஜாசா சார்பில் முகமமட் தஹிர், பாஸ் சார்பில் வான் மகாதீர் மற்றும் பிஎஸ்எம் சார்பில் சுரேஸ் பாலசுப்பிரமணியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் போட்டியிட வாய்ப்புக் கோரி வந்த நிலையில் தேசிய முன்னணி, அந்த வாய்ப்பைத் தரவில்லை. மாறாக, மஇகாவுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளித்தது. இந்தச் சர்ச்சையின் காரணமாக மைபிபிபி தலைவர் பதிவியில் இருந்து கேவியஸ், இதர கட்சி உச்சமன்ற உறுப்பினர்களால் நீக்கப்பட்டார். கேவியஸ் நீக்கப்பட்டத்திற்கு தாமே காரணம் என்று தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரான துங்கு அட்னான் கூறியிருந்தார். இத்தகைய சூழ்நிலையில் பெரும் பரபரப்புடன் கேமரன் மலை தேர்தல் பெரும் பரபரப்பான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker