Latestமலேசியா

தனது 12-வது பொதுத்தேர்தலை சந்திக்கும் லிம் கிட் சியாங்…

கோலாலம்பூர், ஏப்ரல் 28- ஜ.செ.க-வின் ஆலோசகரும் மூத்த அரசியல்வாதியுமான லிம் கிட் சியாங், இஷ்கண்டார் புத்ரி நாடாளுமன்றத் தொகுதியில் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

லிம் கிட் சியாங் & ஜேசன் தியோ சியூ

தேசிய முன்னணி வேட்பாளராக இத்தொகுதொயில் 39 வயதுடைய ஜேசன் தியோ சியூ என்பவர் போட்டியிடுகிறார். இவர் 2000-க்கும் அதிகமான ஆதரவாளர்களுடன் வேட்பு மனுத் தாக்கலுக்கு வந்திருந்தார்.

இந்த பொதுதேர்தலோடு தாம் மொத்தம் 12 பொதுத்தேர்தல்களை சந்தித்துவிட்டதாக கூறிய 77 வயது லிம் கிட் சியாங், இப்போதுதான் முதல் முறையாக தாம் பி.கே.ஆர் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறினார்.

வான் அஸிஸாவுக்கு 5 முனைப் போட்டி!

பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸாவுடன்மேலும் நால்வர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தே.மு வேட்பாளராக ஒரு புதுமுகமான டத்தோ லியோங் கோக் வீ போட்டியிடுகிறார். மேலும் பாஸ் கட்சி, முகம்மட் சுக்ரி ஓமார் என்பவரை நிறுத்தியுள்ளது.

ஒரு வழக்கறிஞருமான முகம்மட் கைருள் அஷாம் என்பவர் சுயேட்சையாகவும், பி.ஆர்.எம் சார்பில் அதன் சிலாங்கூர் மாநில செயலாளர் ஜெனிஸ் யிங் ஙாவும் போட்டியிடுகின்றனர்.

பூச்சோங்கில் மும்முனைப் போட்டியில் கோபிந்த் சிங் !

பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் ஜ.செ.க-வின் பிரபல வழக்கறிஞரான கோபிந்த் சிங்  டியோ மும்முனை போட்டியை எதிர்கொள்கிறார்.

நடப்பு எம்.பி-யான அவர், தே.மு வேட்பாளரான கெராக்கானைச் சேர்ந்த டத்தோ ஆங் சின் டாட் மற்றும் பாஸ் வேட்பாளர் முகம்மட் ரோஸ்ஹரிசான் ஆகியோரிடமிருந்து போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

புத்ராஜெயா – தெங்கு அட்னாணை எதிர்த்து பிரிபூமி போட்டி !

புத்ராஜெயா நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான டத்தோஶ்ரீ தங்கு அட்னான், பிரிபூமி பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி வேட்பாளர்களுடன் போட்டியிடுகிறார்.

புத்ராஜெயாவின் நடப்பு எம்.பி த்ங்கு அட்னான் ஆவார். பிரிபூமி பெர்சத்து சார்பில் ஒரு கல்வியாளரான டத்தோ டாக்டர் சம்சுல் அடாபி மாமுட் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மேலும் பாஸ் சார்பில் ஜைனால் அபிடின் கிட் மான் போட்டியிடுகிறார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker