Latestமலேசியா

தியான் சுவா வேட்புமனு தள்ளுபடி சட்ட விரோதமானது! வழக்கறிஞர்

கோலாலம்பூர், ஏப்ரல் 28 – பத்து நாடாளுமன்றத் தொகுதியில் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்த பி.கே.ஆர், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்ட விரோதமானது என்று வழக்கறிஞர் என்.சுரேந்திரன் கூறினார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அவர் சொன்னார்.
இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஒருவருக்கு நீதிமன்றத்தில் 2 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் என்றும் அவர் போட்டியிட முடியும் என்பது சட்டத்தின் பொதுவான நிலை என்று வழக்கறிஞர் சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.

பல்வேறு வழக்குகளில் இதுதான் நிலைப்பாடு. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் அவர் போட்டியிட முடியும் என்று ஏற்றுக் கொண்டிருப்பது மீதான ஆவணங்களையும் தியான் சுவா, தமது வேட்புமனுத் தாக்கலின் போது வழங்கியுள்ளார். ஆனால், தேர்தல் ஆணைய அதிகாரி, பிடிவாதமாக அந்த ஆவணங்களை ஏற்க மறுத்தது தவறு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தியான் சுவாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பில், வழக்குத் தொடுக்கப்படுமானால், அதனை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ முகம்மட் ஹாசிம் கூறினார்.

இதனிடையே, தமது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக தியான் சுவா போலிசில் புகார் செய்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker