Latestமலேசியா

மாபெரும் பிரசாரக் கூட்டங்கள்: பினாங்கை கலக்குகிறது பக்காத்தான் ஹராப்பான்!

ஜார்ஜ் டவுன், ஏப்ரல்.29- வேட்புமனுத்தாக்கல் முடிந்த கையோடு பினாங்கில் எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் பிரசார களத்தை கலக்கி எடுக்கும் விதமாக இரண்டு மாபெரும் பிரசாரக் கூட்டத்தைக் கூட்டி அசத்தியது.

பினாங்கின் ‘எஸ்பிளானாட்’ என்ற இடத்தில் அது மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டியது. அடுத்து பட்டர்வொர்த்திலுள்ள டேவான் ஹாஜி அகமட் படாவியின் முன்புறம் இரண்டாவது மாபெரும் கூட்டத்தை அது கூட்டியது. இவ்விரு கூட்டங்களும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டன.

பக்காத்தானின் முக்கிய தலைவர்கள் இங்கு ஒன்று திரண்டனர். அலையலையாக திரண்டு நின்ற மக்கள் கூட்டத்தில் லிம் கிட் சியாங், லிம் குவான் எங், அன்வாரின் மகள் நூருல் இஷா, அமானா இளைஞர் பிரிவுத் தலைவர் முகம்மட் ஃபைஷ் ஃபிஷால், பெர்சத்து மலேசியா கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவர் மார்ஷுக்கி யாஹ்யா ஆகியோர் பல்வேறு அரசியல் அம்சங்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் துன் மகாதீரின் மகள் மரினா மகாதீரும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். தம்முடைய தந்தையார் தமது ஓய்வு காலத்தைக் கூட நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் விட்டுக் கொடுத்து விட்டு அரசியல் களத்தில் நிற்கிறார் என்று மரினா கூட்டத்தில் குறிப்பிட்டார்.

”எல்லோரும் முழு வீச்சில் வாக்குச் சாவடிகளுக்கு திரண்டு வந்து வாக்களியுங்கள். பினாங்கைப் பொறுத்தவரை பக்காத்தான் மீண்டும் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன். அதேவேளையில் மத்திய அரசாங்கத்தையும் மாற்றுவதற்கு நீங்கள் முன் வரவேண்டும்” என்று கூட்டத்தில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker