Latestமலேசியா

10 ஆவது முறையாகப் போட்டி: குவாங் மூசாவில் துங்கு ரசாலி!

குவாங் மூசா, ஏப்ரல்.29- கிட்டத்தட்ட 44 ஆண்டுக் காலமாக கட்டிக் காத்து வரும் தமது சொந்தத் தொகுதியான குவாங் மூசாவில் நேற்று மீண்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் துங்கு ரசாலி ஹம்சா.

அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதியமைச்சருமான துங்கு ரசாலி, கிளந்தானிலுள்ள குவாங் மூசா நாடாளுமன்றத் தொகுதியில் 10ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். 1974 ஆம் ஆண்டில் அவர் முதன்முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.

இம்முறை அவரை எதிர்த்து பாஸ் கட்சி வேட்பாளராக அப்துல்லா ஹுசைன், பக்காத்தான் வேட்பாளராக முகம்மட் நோர் ஹுசைன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் கட்சி வேட்பாளரைக் காட்டிலும் 8,413 வாக்குகள் கூடுதலாகப் பெற்று துங்கு ரசாலி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker