Latestஉலகம்

இனி மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்! – மருத்துவ உலகின்  புதிய நம்பிக்கை

வாஷிங்டன், ஏப்ரல்.30- இங்குள்ளஏல்பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி  ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின்நியூரான்செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம் என்கிற முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதனால்  மூளையையும் மாற்றிக்  கொள்ளக்கூடிய மருத்துவ வசதிகள் உருவாகும் காலம் நெருங்கி விட்டது  என்று நம்பலாம்.

அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழக  ஆய்வுக்குழு தலைவர் நெனாட் சேஸ்தான் உயிரிழந்த சுமார்100 பன்றிகளின்  உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி சோதனை மேற்கொண்டார்.

அதில் பெரும்பாலான மூளைகளில் இருந்த பல மில்லியன் செல்கள் உடலை விட்டுப் பிரிக்கப் பட்ட 36 மணி நேரம் வரை உயிர்ப்போடு இருந்ததாக  தெரிவிக்கப்பட்டது .

அப்போது பன்றி மூளையில் மின்காந்த அலைகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்த பின்னர், இயல்பாகவே மூளையானது சுயமாக விழிப்பு நிலையில் இருக்காது என்பதை அறிந்து கொண்டோம்.

ஆனால் விழிப்பு நிலையில் இல்லை என்பதற்காகவே மூளை உயிருடன் இல்லை எனக் கூறி விட முடியாது. உயிர்ப்புடன் உள்ள  மூளை உடல் நரம்புகளின் உதவியுடன். விழிப்பு நிலையை அடையும் என்று ஆய்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.

இதே முறையை உயிரிழந்த மனிதனின் மூளையோடு பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வெற்றி கண்டால் மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்து பயன்படுத்த இது உதவும் என ஆய்வுக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker