Latestவிளையாட்டு

பேட்மிண்டன்: ஜப்பான் மொமோட்டா அதிரடி

ஹுஹான், ஏப்ரல். 30- ஜப்பானின் இளம் பேட்மிண்டன் வீரரான கென்டோ மொமோட்டா ஆசிய பேட்மிண்டன் சாம்பியனாக வாகை சூடினார்.

இறுதியாட்டத்தில் சீனாவின் சென் லோங்கை 21-17, 21-13 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அவர் சாம்பியன் ஆனார்.

பந்தய சூதாட்டம் காரணமாக இடைக்கால தடையை எதிர்நோக்கிய மொமோட்டா கடந்த ஓராண்டு காலம் விளையாடாமல் இருந்த பின்னர் பேட்மிண்டன் களத்திற்கு திரும்பியுள்ளார்.

சீனாவில் நடந்த இந்தப் போட்டியில் லீ சோங் வெய் உள்பட முன்னணி ஆட்டக்காரர்களை வீழ்த்தி மொமோட்டா இறுதியாட்டத்திற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker