Latestமலேசியா

மக்கள் பணத்தை எடுத்தேனா? –டான்ஶ்ரீ ருஸ்தாம் மறுப்பு

மலாக்கா, எப்ரல் 30 – ஏழைகளிடமிருந்து பணத்தை தாம் களவாடியதாக எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரத்தை நிராகரித்தார் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் டான்ஶ்ரீ முகம்மட் அலி ருஸ்தாம்.

வாக்குகளை ஈர்ப்பதர்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஹாங் துவா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டான்ஶ்ரீ ருஸ்தாம், மக்களின் பணத்தை தாம் திருடி விட்டதாக கூறுவது உண்மையில் மிக மோசமான குற்றச்சாட்டாகும். இதற்கு எதிராக தாம் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

என்னை இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பெரிதும் களங்கப்படுத்தி உள்ளது என்பதால் இந்தக் குற்றச்சாட்டை கூறிய புக்கிட் காடில் எம்.பியான சம்சுல் இஷ்கந்தர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker