Latestமலேசியா

அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம்; மறக்க மாட்டோம்! –முக்ரீஸ் மகாதீர்

சிக், மே.1- பொதுத் துறை சேவையில் ஈடுபட்டிருக்கும் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களின் வேலையில் கண்ணியத்துடனும், நியாயமாகவும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிபூமி கட்சியின் துணைத் தலைவரான முக்ரீஸ் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் சிலர், தேசிய முன்னணிக்கு ஏற்றார் போல் செயல்பட்டு, தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
“அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அனைவரையும் நினைவில் வைத்துள்ளோம். புத்ராஜெயாவை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றினால், பொறுப்பற்ற முறையில், அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எங்களுக்கு சிரமங்களை கொடுத்த அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்” என்று முக்ரீஸ் சொன்னார்.

ஜொகூர் மாநிலத்தில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை ஒன்றை தேர்தல் ஆணையம் அகற்றியது. அந்த விளம்பரப் பலகையில் துன் மகாதீர் முகமட் மற்றும் ஆயிர் ஹீத்தாம் வேட்பாளர் லீயூ சின் தொங் ஆகியோர் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறையை மீறும் வகையில் அந்த விளம்பரப் பலகை அமைந்துள்ளதாக அந்த ஆணையம் கூறியுள்ளது.  ஆனால், மசீச தலைவர் லியோவ் தியோங் லாய் மற்றும் சீன நாட்டு தலைவர் ஷீ ஜின்பிங் ஆகியோர் அடங்கிய விளம்பரப் பலகை அகற்றப்படவில்லை. அந்த விளம்பரப் பலகை ஏன் புதிய விதிமுறையின் படி அகற்றப்படவில்லை என்று முக்ரீஸ் கேள்வி எழுப்பினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker