Latestமலேசியா

தே. மு. வெற்றி பெற்றால் குறைந்த பட்ச சம்பள நிலை உயர்த்தப்படும்! – நஜிப் உறுதி

கோலாலம்பூர், மே.1- 14-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், சபா மற்றும் சரவாக் மாநில மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரிம.920 குறைந்த பட்ச சம்பள அளவு உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ ரஜிப் ரசாக் கூறினார்.

தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதும் அவ்விரு மாநிலங்களில் குறைந்த பட்ச வருமானம் பெறும் மக்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தொழிலாளர் தினக் கூட்டத்தில் அவர் அறிவித்தார்.

“இப்போது ரிம.920-ஆக இருக்கும் அவர்களின் குறைந்த பட்ச ஊதியம், ரிம.1000-ஆக உயர்த்தப்படும். மக்களின் வருமானம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றால் தொடர்ந்து மக்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என்றார் அவர்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டு மக்களின் குறைந்த பட்ச வருமானத்தை ரிம.1,500-ஆக தேசிய முன்னணி அரசாங்கம் உயர்த்தும் என்று அக்கூட்டணியின் கொள்கை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், சொக்சோவிற்காக ஒதுக்கப்படும் ரிம.60 மில்லியனை ரிம.182 மில்லியனாக அரசாங்கம் அதிகரிக்கும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.  எம்.டி.யு.சி எனப்படும் தேசிய தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் ரிம.3 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker